day, 00 month 0000

ஹேக்கர்களால் குறிவைக்கப்படும் யூடியூப் சேனல்கள்

அண்மைக் காலமாக பிரபல யூடியூபர்களை ஹேக்கர்கள் குறிவைத்து வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூபர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்த அவர்களது சேனல் நிர்மூலம் ஆவதோடு, அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சாமானிய பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

ஆரம்பத்தில் வங்கி இருப்பை குறிவைத்த ஹேக்கர்களின் தற்போது பல்வேறு திசைகளைளில் கொள்ளையடிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் மிகப்பெரும் நிறுவனங்களின் சர்வர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கணினி ஆகியவற்றை ஹேக்கர்கள் குறிவைத்தார்கள்.

இது தற்போது தற்போது பிரபல யூடியூபர்களையும் குறி வைத்துள்ளன.

பிரபல யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் குறிவைப்பதன் நோக்கம் இரு வகையில் அமைகிறது.

முதலாவது குறி வைப்பு, யூடியூப் பிரபலத்துக்கு. சேனலை கைப்பற்றும் ஹேக்கர்கள் வழக்கமான ரான்சம்வேர் பேரங்களை முன்வைப்பார்கள்.

யூடியூபர்களை பணியச் செய்ய, சேனலின் வீடியோக்களை அழித்து, சப்ஸ்கிரைபர்களை தெறித்தோடச் செய்யும் வகையிலான வீடியோக்களை பதிவேற்றி மிரட்டுவதாக கூறப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்