Site Logo

டிஎன்பிஎல் 2025: நெல்லையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்

Views: 71

முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

டிஎன்பிஎல் 2025: நெல்லையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்

டி.என்.பி.எல். தொடரின் 24-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.


என்.எஸ்.ஹரிஷ் 20 பந்தில் 43 ரன்னும், சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 39 ரன்னும் விளாசினர். சந்தோஷ் குமார் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, அஸ்வின், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 31 பந்தில் 45 ரன்னும்,


மான் பாப்னா 28 பந்தில் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹன்னி சைனி 14 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.


இறுதியில், திண்டுக்கல் அணி 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.


ஏற்கனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.