சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.
நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.