இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
2007ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியானது டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற நிலையிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027க்கு இதுதான், இந்தியாவின் முதல் தொடர் என்பதாலும், இந்திய அணிக்கு இதனை வெற்றியுடன் துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.