அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்று பணியாற்ற தயார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நூலில் குறிப்பிடபட்டுள்ளவைகள் அனைத்தையும் நிரூபிக்க முடியும் என எங்கும் தெரிவிக்கப்படவில்லை எனவும் சிக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யுத்தத்திற்கு காரணமாக இருந்தது அரசாங்கம் எனவும் அப்படியிருக்கையில் வெறுமனே ஏல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் உள்ளிட்டோர் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதுதொடர்பில் நிதானித்து தீர்மானிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் முதலாவது பாராளுமன்றத்தில் தமிழ் மொழியே இலங்கையின் தொன்மையான மொழி என ஆய்வு செய்த பின்னரே கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகவே முதலாவது பாராளுமன்ற அமர்வில் தான் கூறியதில் எந்தவித பிழையும் இல்லை எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் ஐ.நா உள்ளிட்ட சர்வதேசம் சமூகம் நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்வருவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் எந்வொரு தீவிரவாத அமைப்பும் இருக்கவில்லை என கூறிய அவர் மாறாக சிவில் மக்களே கொல்லப்பட்டதாகவும் மேலும் கூறினார்.