கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர்,
கொரோனா தொற்று முழுமையாக நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை என்ற அடிப்படையில், வைரஸ் தொற்றுக்கான எதிர்ப்பு செயற்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை கொரோனாத் தொற்று இன்னும் சமூகத்தில் பரவவில்லை. எனினும் இதற்கான ஆபத்தை நிராகரித்து விடமுடியாது என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.