கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் கூடவிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேதியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மற்றுமம் கொரடா தொடர்பான நிலைப்பாடுகள் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.