கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைப்போல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது