கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
தனது மகளுக்கு தடுப்பூசி கொடுத்து பரிசோதிக்கப்பட்டதாகவும், உலகின் முதல் தடுப்பூசி என்று பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.
ரஷ்யா அவசரம் காட்டுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனமும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதையும் வெளியிடவில்லை.