நாடாளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. அதன்போது, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் வரையான அரசாங்கத்தின் செலவுகளுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த தினங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 6.30 வரை இடைக்கால கணக்கறிக்கை சம்பந்தமான விவாதம் நடைபெறவுள்ளது.
அதேவேளை 9வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு பயிற்சி கருத்தரங்கின் இறுதி நாள் இன்றாகும்.