அரசமைப்பின் 13ஆவது திருத்தம் ஒரு வார காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு திருத்தமாகும் என்பதால் அதில் குறைபாடுகள் இருக்க முடியும். எனவே, அது தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படவில்லை. அதைச் சுயாதீனமாக்குவது தொடர்பில் சில மாற்றங்களை எதிர்வரும் அரசமைப்பு திருத்தம் மூலம் மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
19ஆவது அரசமைப்பு திருத்தம் நாட்டின் எதிர்காலப் பயணத்துக்குப் பாரிய தடையாக அமையும். அதன் விளைவுகளை கடந்த காலங்களில் கடுமையாக அனுபவிக்க நேர்ந்தது. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வெளியிடும் கூற்றுக்கள் இனவாதம் சார்ந்தவை. தேசிய ஒற்றுமைக்கு அது பெரும் பாதிப்பாக அமையும் என்று நாம் நினைக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.