Site Logo

மம்மூட்டி பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூரி: பிளாக்பஸ்டர் காம்போ லோடிங்

Views: 131

சமீபத்தில் சூரி தமிழ் திரையுலகில் கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது.

மம்மூட்டி பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூரி: பிளாக்பஸ்டர் காம்போ லோடிங்

சமீபத்தில் சூரி தமிழ் திரையுலகில் கதாநாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக மாமன் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது மண்டாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூரி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்க இருக்கிறார்.

லிஜோ ஜோஸ் இதற்கு முன் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற மாஸ்டர்பீஸ் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்க போகும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாக இருக்கும்,இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.