// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றம்

தையிட்டி விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பதற்ற நிலை  ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று (03 .05.2023)  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை அடுத்து அப் பகுதியில்  பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்