// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு, 13ஜ எதிர்ப்பதற்கு முதுகெலும்பு உண்டா?

எதிர்வரும் 25 ஆம் திகதி கடையடைப்பு போரட்டத்தை முன்னெடுக்கின்ற தமிழ் தரப்புகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையப்போவதில்லை என்றும் அவ்வாறு இணைந்தால் அது தமிழ் 

மக்களை முட்டாள் ஆக்கும் செய்பாடகவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஹர்த்தால் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஹர்த்தாலானது தங்களுடன் சமபந்தப்பட்ட விடயம் அல்ல என்றும்  மாறாக குறித்த தமிழ்த் தரப்புகள் புதுப்புது அமைப்புக்களை  உருவாக்க முன்னமே, இவற்றுக்கெதிராக தாம் போராடிக்கொண்டிருக்கும் அமைப்பு தாம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களை எதிர்க்க வேண்டுமென்றால் வேறு எவருடைய உதவியையும் தேடாமல், மக்களிடம் இவற்றை கொண்டு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைப்பை உருவாக்கிக் கொள்பவர்கள், இந்த பிரச்சனைக்கு அடிப்டையான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை, உட்பட 13 ம் திருத்தச்சட்டத்தை தொடர்ந்தும் ஆதரிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருபுறம் அமைப்புகளை உருவாக்கி போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றுபவர்கள், மறுபுறம் இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒற்றையாட்சிக்குளிருக்கும் 13 ம் திருத்தச்சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பற்றவர்களாகக் காணப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டமாக பதில் வழங்கியுள்ளார்.

எனவே இவ்வாறான தரப்புகளுடன் இணைவதானது, மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும் என்றும் மாறாக மக்களுக்கு இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்