// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை உரிமை கோருவது தொடர்பில் விசேட கூட்டம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் வீற்றிருக்கும் தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணச் சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று  நல்லை ஆதீன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

குறித்த கூட்டத்தில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் இந்து சமய பெரியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்