// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை செய்வதில் எந்த பயனும் இல்லை

மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை செய்வதில் எந்த பயனும் இல்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இரகசிய பேச்சுவார்தை முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த ஒப்பந்தம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதனை விவாதிக்காமல் ஒப்பந்தங்களை செய்ய முடியாது என்றும் வெளிநாடுகள் உதவி செய்தாலும் அல்லது சர்வதேச நாணய நிதியம் உதவி செய்தாலும் அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் மக்கள் ஆணை உள்ள அரசங்கத்துடன் செய்யப்பட்டலே அது நிரந்தரமானதாக இருக்கும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்