// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்தின் உடல் தீயுடன் சங்கமமானது

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகத்தின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும், பத்தி எழுத்தாளராகவும் செயற்பட்டு வந்த பொன்னையா மாணிக்கவாசகம், தனது 76ஆவது வயதில் நேற்றைய தினம்  அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார் நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்து தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்தி வந்தார்.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய அவர், இறக்கும் வரை ஊடகத்துறையில் துணிவுடன் செயற்பட்டு வந்தவராவார்.

அவரது இறுதி கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த இறுதிக் கிரியை நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று, அவரது உடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தட்சன்குளம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமாகியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்