// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐ.பி.எல் டி20 போட்டி- இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. 

தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோவை 12 ரன் வித்தியாசத்திலும், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானேவின் மின்னல்வேக அரைசதமும், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு உதவின.

உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்திய சென்னை அணி இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. 

தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. இதே போல் பெருவிரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை என்று சென்னை வீரர் ஜடேஜா நேற்று கூறினார். 

அதனால் உள்ளூர் ஆட்டத்தை ஸ்டோக்சும் தவற விடுகிறார். மற்றபடி ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஜடேஜா, ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, கேப்டன் டோனி உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். 

ராஜஸ்தான் எப்படி? 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (பஞ்சாப்புக்கு எதிராக) 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் வியூகங்களை தீட்டியுள்ளது.

 ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வத்தில் எதிர்நோக்கிக் கொண்டிக்கின்றன.

 
 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்