// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானதா – ஜெனிவாவில் எழுந்த கேள்வி

இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானது தான் என, இனியும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை, பாசாங்கு செய்ய முடியுமா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 52வது அமர்வு இன்றைய தினம் ஜெனீவாவில் இடம்பெற்றிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

கடந்த பெப்பிரவரி மாதம், இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு,  பாதிக்கப்பட்ட தரப்புகளான - வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியற்கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரையும் சந்தித்தனர். 

இந்த சந்திப்புகளின் போது, பழையவற்றை மறந்துவிடுமாறும், பொறுப்புகூறலை வலியுறுத்த வேண்டாம் எனவும் முன்னைய குற்றச்செயல்கள் பற்றிய விடயங்களை இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கையாளும் எனவும், தாம் சந்தித்தவர்களிடம் பரப்புரையில் ஈடுபட்டதுடன், அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இவ்வாலோசனைகளை நிராகரித்து, சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்தியபோது, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு தனது களப்பயணத்தை முடித்துக்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற உள்ளகப் பொறிமுறையினை 

அமைப்பதற்கு, தாம் சந்தித்த பாதிக்கப்பட்ட தரப்புகள் இணங்கிக்கொண்டதாக தவறாகக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், பல தவறான தகவல்கள் அவ்வறிக்கையில் காணப்படுதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்