// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிரம் அதன் தோற்றத்தில் 7.7 ஆக இருந்ததாகவும் ஆனால் பாகிஸ்தானில் அது 6.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர் நகரங்களும் நிலநடுக்கத்தால் அதிர்ந்துள்ளன. 

இஸ்லாமாபாத்தில்,இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் தூக்கம் தொலைத்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு(21.03.2023) திடீரென்று 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசியாவில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.

நேற்றைய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிகமாக பதிவாகி உள்ளது.

இதற்கமைய பாகிஸ்தானில் சுமார் 30 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பல இடங்களில் உள்ள கட்டங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்