// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கைலாசாவில் இலவசமாக குடியேற வாய்ப்பு- நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இந்தியாவை விட்டு தலைமறைவாகியவர்தான் நித்தியானந்தா.

இந்தியாவை விட்டு தலைமறைவான பின்னர் சிறு தீவொன்றினை வாங்கி அதில் கைலாசா எனும் இந்து நாட்டை உருவாக்கியதாக திடீர் அறிவிப்பு விடுத்த நித்தியானந்தா கைலாசா நாட்டினை தனிநாடாக மாற்றுகின்ற செயற்பாட்டில் இறங்கினார்.

அதன் தொடர்ச்சியாக கைலாசா நாணயம், பாஸ்போட், முத்திரை, இணையதளம் என அடுத்தடுத்து அதிரடி பல்வேறு அறிவிப்புக்களை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது கைலாசாவில் இலவச குடியுரிமை பெற முயற்சிக்கலாம் என்ற கருத்தினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளமை  பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் கைலாசா நாட்டினை அமெரிக்கா மற்றும் ஐக்கியநாடுகள் சபை அங்கீகரித்ததாக கூறி,  கைலாசாவின் அதிகார பூர்வ இணையதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா மாநாட்டில் கைலாசா சார்பில் பெண்ண பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இதனால் பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாதென ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாசா நாட்டிற்கு ஐ.நா சார்பில் அங்கீகாரம் கிடைத்ததா என இது வரை அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நித்தியானந்தா,  சமூகவலைத்தளங்களில் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். அதில் 'நீங்கள் ஒரே எண்ணம் கொண்ட சமூகத்துடன் இணைக்க விரும்பும் இந்துவாகப் பயிற்சி செய்கிறவரா அல்லது ஆர்வமுள்ளவரா?கைலாச இலவச மின் குடியுரிமையில் சேருங்கள் மற்றும் அறிவொளி பெற்ற இந்து சமூகத்தின் உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாகுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

அதில் உலகம் முழுவதுமுள்ள இந்துக்களுக்கு என உருவாகியிருக்கும் நாடு என்றும் , உலகம் எங்குமுள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த குடியுரிமையினை பெற சிறப்பு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்