பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமியின் அடாவடியான கைதுக்கு கிறிஸ்தவ பாதிரியார் கந்தையா ஜெகதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர், இ்ன்றைய நாளியே சிறிலங்கா அரசானது துன்பமும், அவலமும் நிறைந்த செயலை நிறைவேற்றி இருக்கிறது.
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மானிட உரிமைக்காக முன்னின்று செயற்படுபவருமான வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டார்.
ஆன்மீகக் குருவாகவும், துன்புறுகின்ற மக்களுடைய தொண்டனாகவும், இருப்பவரை காவல்துறை கைதுசெய்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியதாத வன்மம் நிறைந்த செயலாகும்.
இது சிறிலங்காவின் எதேச்சதிகார நகர்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.