பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் சற்று முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்றைய தினம் மாலை அவரது இருப்பிடத்துக்கு சென்ற பொலிசார் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்
3 மணி நேர விசாரணையின் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வேலன் சுவாமியின் சட்டவிரோதமான கைதுக்கு எதிராக, வேலன் சுவாமி சார்பில் இந்து அமைப்புக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எ.சுமந்திரன் ஆஜர் ஆகியுள்ளார்.