// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மோதிக்கொண்ட மைத்திரி-பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டியேற்றபட்டுள்ளதாகவும் இழப்பீட்டை செலுத்த புறக்கோட்டை உண்டியலை குலுக்கிக்கொண்டு இருக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.

உண்டியலை குலுக்கிக்கொண்டு புறக்கோட்டையில் இருக்க வேண்டிய நபர்களை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்தால், இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னிடம் பணம் இல்லை என்பதால், புறக்கோட்டையில் பணம் கொடுத்தாலும் நான் பெற்றுக்கொள்வேன்.

கடந்த சில தினங்களாக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று பொன்சேகா கூறி வருகிறார். தயவு செய்து, உயர் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பை வாசியுங்கள். தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவில்லை என்றே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் இருந்த உங்களை நானே குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்தேன். பீல்ட் மார்ஷல் பதவி வழங்கினேன். என்னை இப்படி பேசுவது அநீதியானது.

என்னை இலக்கு வைத்து பாதுகாப்பு பற்றி உங்களால் பேச முடியாது. நீங்கள் இராணுவ தலைமையகத்தில் இருந்த போதே உங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தான் இருக்கும் இடத்தின் பாதுகாப்பை கூட பலப்படுத்த தெரியாதவர் என்னை பற்றி பேசுகிறார் என கூறினார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்