// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நட்டஈடு செலுத்த சொத்து இல்லை - கைவிரித்த மைத்திரி!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபா பணத்தை நட்டஈடாக வழங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லையென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தான் தலைவணங்குவதாக நிட்டம்புவ விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே 100 மில்லியன் ரூபா பணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் சொத்து இல்லை என்றும் அந்த நட்டஈட்டு தொகையை திரட்டுவதற்கு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்தடியில் இருக்க வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தானும், தனக்கு நெருக்கமானவர்களும் இணைந்து பணத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்