// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான நேற்றைய(செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தற்போதும் எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து விசேடமாக ஆராயப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு ஆகிய மூன்று முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம். இவற்றுக்கானத் தீர்வை எவ்வாறு வழங்குவது என்பதை ஆராய்ந்தோம்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினைகள் அன்று உள்ளதைப் போன்றே தான் தொடர்ந்தும் காணப்படுகின்றன. அரசமைப்பில் உள்ள அதிகாரப் பரவலாக்கல் குறித்தும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தினோம்.

ஆனால், அரசாங்கம் இவற்றுக்கு உரிய பதிலை வழங்கவில்லை. இதனால், அரசாங்கத்திற்கு ஒருவார கால காலக்கெடுவை தற்போது வழங்கியுள்ளோம்.

இதற்குள் அரசாங்கம் தீர்வுத்திட்டங்களை முன்வைக்காவிட்டால் நாம் தொடர்ந்தும் பேச்சு நடத்தப் போதவதில்லை. கடந்த கூட்டங்களின்போது தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்குக் கூடி, இந்த விடயங்களை ஆராய நாம் தீர்மானித்திருந்தோம்.

எனினும், எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் நாம் இந்தத் தீர்மானத்தை தற்போது கைவிட்டுள்ளோம். ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் மீண்டும் பேச்சு நடத்துவதா – அது எப்போது நடைபெறும் என்பதை தீர்மானிப்போம்.

அதேநேரம், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துப்போட்டியிடவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் எவரும் போட்டியிடப் போவதில்லை.

தேர்தல் முடிவடைந்தவுடன் நாம் மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றுக்கூடி, நிர்வாகக் கட்டமைப்புக்களை தீர்மானிப்போம். இந்தத் தேர்தலில் எமக்கு சவால்கள் கிடையாது. எமகு பகுதிகளில் நாம் வெல்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

தொடர்ச்சியாக நாம் தான் அங்கு வென்று வருகிறோம். எனவே, தேர்தல் வெற்றியில் எமக்கு சந்தேகம் இல்லை. சமூக மாற்றம் கூட எமக்கு சாதகமாகவே காணப்படுகின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்