யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்றம்
அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை (09.01.2023) முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே இந்த தோண்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.