அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்செய்யுள்ளார்.
ஜோ பைடனின் நிர்வாகத்தினால் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சுமோனா குஹா என்ற அதிகாரியே இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
பாதுகாப்பு துறை தொடர்பான நிபுணரான இந்திய வம்சாவளியான இந்தப் பெண் அதிகாரி இலங்கைக்கான விஜயத்தின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
எனினும் இலங்கைக்கான பயணத்தை தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் காணப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், ஜோ பைடனின் உயர் மட்ட பாதுகாப்பு பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்வது முக்கியத்துவமிக்கதாக மாறியுள்ளது.