// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சுயமரியாதை அற்றவர்களே இன்று தமிழனத்திற்கு தலைவர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கிற்குள் உள்நுழைய முடியாதவர்கள் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடகிழக்கிற்குள் நுழைந்து அனைத்தையும் விற்று வயிறு வளத்து வருவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர், கலாநிதி க.சிதம்பரநாதன் விமர்சனம் செய்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியபோதே அவர் இவ்வாறு விமர்சித்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களின் தலைவர்கள் சுயமரியாதையுடன் செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்றும் மாறாக சுயமரியாதையை இழந்து எதனையும் விற்று வயிறு வளர்பவர்களாளேயே தமிழ் மக்களுக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு வரையும்  புலிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லை என கூறினார்கள், புலிகள்     பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என கூறினார்கள், இன்று இரண்டுமில்லை. மக்களிடம் விடுதலை புலிகள் தொடர்பாக விருப்பமுள்ளது.

மக்களின் நியாயமான அபிலாசைகள் கவனிக்கப்பட வேண்டும். இன்று தமிழர் பகுதிக்குள் நுழைந்த சிலர் 2009க்கு முன் இந்த மண்ணை மிதித்து இருக்க முடியாது. 

ரணில் இன்று செய்வது சிங்கள நாடு என்ற ரீதியில் என்ன செய்யலாம் என்பது. ஆனால் சுமந்திரன் போன்றோர் எதையும் ஏற்று கொள்வோம் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நடந்து கொண்டு இருப்பது பேச்சு வார்த்தை அல்ல. பேச்சு வார்த்தை என்பது இரண்டு இனங்களின் தலைமையும் இரண்டு இனங்களின் விருப்பங்களை வைத்து கதைப்பது. 

இப்பொழுது நடப்பது அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவது தான் இதை தான் சுமந்திரன் செய்கின்றார். எனவும் மேலும் குறிப்பிட்டிருந்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்