// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனடாவில் வாடகைக் கட்டண நிலவரம் மோசமடையும் நிலை

2023இல் வாடகைக் கட்டணங்கள் மிக மோசமாக இருக்கப் போகிறது என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

கனடாவில் குடியிருப்புகளின் விலை சரிவடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகை கட்டணங்கள் தொடர்பில் பேரிடியான தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் இரண்டாவதாக மிக அதிகம் வாடகை வசூலிக்கப்படும் பகுதி ரொறன்ரோ.

இங்கு ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டுக்கு சராசரியாக இந்த டிசம்பரில் 2,551 டொலர் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.5% வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.

இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 3,363 டொலர் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பு எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், வாடகை குடியிருப்புகளுக்கு கனடாவில் தேவை மேலும் அதிகரித்துள்ளதாகவே கூறுகின்றனர். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்