// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மணிவண்ணன் ராஜினாமா: மேயர் தேர்வு இனி இடம்பெறாது என அறிவிப்பு

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு  தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்ததாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். 

கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை’ என்று உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் குறிப்பிட்டார்.

இதனால் யாழ். மாநகரசபையை யார் நிர்வகிக்கப்போகின்றனர் என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன. மாநகரசபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ள நிலையில், ஆணையாளரின் அல்லது உள்ளூராட்சி ஆணையாளரின் கீழ் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் முடிவுக்கு வருகின்றன. 

அதற்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டால், சபைகளின் பதவிக்காலங்கள் ஜனவரி மாதத்துடன் முடிவுறும் என்பது குறிப்பிடத்தக்கது. – என்றுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்