// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை - அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை ஏற்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையானது நாட்டு மக்களின் நலன் சார்ந்ததாக காணப்படும்.

குறித்த இரு நாடுகளுடனான எங்களது உறவில் எவ்வித இடைவெளியும் இல்லை.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போரை நாங்கள் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது இந்தியா, பாகிஸ்தானிடையே உலகளாவிய ஆழமான கூட்டாண்மையை கொண்டுள்ளோம்.

இரு நாடுகளுடனும் நாங்கள் உறவு வைத்துள்ளோம். அதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உரையாடலை நாங்கள் விரும்புகிறோம்.

இது பாகிஸ்தான் மற்றும் இந்திய மக்களின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அதோடு நில்லாமல் இரண்டு நாடுகளின் உறவும் அமெரிக்காவிற்கு இன்றியமையாதது.”என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்