// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை

மறுசீரமைப்பின் கீழ், இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து, புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

2002 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய 8 நிறுவனங்களை ஸ்தாபிப்பது தொடர்பான குழுவின் அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்படும் 8 நிறுவனங்களின் கீழ், மின் உற்பத்திக்காக இரண்டு நிறுவனங்களும், பரிமாற்றத்துக்காக இரண்டு நிறுவனங்களும், விநியோகத்துக்காக நான்கு நிறுவனங்களும் உருவாக்கப்படவுள்ளன.

மின்சார உற்பத்திக்காக நிறுவப்படும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திக்காகவும் மற்றைய நிறுவனத்தை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் நிறுவ முன்மொழியப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களை அரசுக்கு சுமையாக இல்லாமல் வணிக நிறுவனங்களாக நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவிக்குப் பதிலாக, இந்த எட்டு நிறுவனங்களுக்கும் உரிய அதிகாரியொருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக, மின்சாரத்துக்கான தனியான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நியமிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, மின் கட்டணத்தை 70 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதில் முப்பது சதவீதத்தை ஜனவரி மாதத்திலும்  40 சதவீதத்தை ஜூன் மாதத்திலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்