// print_r($new['title']); ?>
கனடாவின் வான்கூவாரில் தீவுகளில் பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது.
வான்கூவார் தீவுகளில் சுமார் 4.6 ரிச்டர் அளவில் பூமி அதிர்வு பதிவாகியுள்ளது. வான்கூவாரின் கரையோரப் பகுதியில் இந்த பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 12.39 மணியளவில் பூமி அதிர்வு பதிவாகியுள்ளது என கனேடிய பூமி அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பூமி அதிர்வு காரணமாக எவ்வித சேதங்களோ, நபர்களுக்கு காயங்களோ உயிர் ஆபத்துக்களோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூமி அதிர்வு காரணமாக சுனாமி ஆபத்து எதுவும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.