// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலை மீது தொடர் தாக்குதல் - எச்சரிக்கும் ஐநா

.ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. 

மேலும், உக்ரைனில் உள்ள பல்வேறு அணுமின் நிலையங்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்த நாடு காரணம் என்பது குறித்து வெளிப்படையான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், உக்ரைனில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தின் மீது இன்று பலமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான அதை தற்போது ரஷ்யா தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது. இதனால், பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

நேற்று மாலையிலிருந்து தற்போதுவரை, 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் அந்த அணுமின் நிலையம் மீது தொடுக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து அந்த முகமை கூறியதவாது,"அங்கிருந்து எங்கள் அணியினர் நேற்று மாலையில் தரும் அத்தனை தகவல்களும் மிகவும் கவலைக்கொள்ளச் செய்கிறது. மிகவும் வருத்தம் ஏறபடுத்தும் வகையில் அவை உள்ளன. அந்த அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டடங்கள், அமைப்புகள், உபகரணங்கள் ஆகியவை மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.

அணுமின் நிலையத்தின் பெரும்பான்மையான இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை பின் யார் இருந்தாலும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். நாங்கள் பலமுறை கூறியுள்ளோம், நீங்கள் பெரும் நெருப்புடன் விளையாடி வருகிறீர்கள்" என்றனர். 

இந்த தாக்குதல்களுக்கு, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் மாறி மாறி பழிப்போட்டு வருகின்றனர். யாரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இது பெரிய ஆபத்தில் கொண்டு விடும் என்றும், இந்த அணுமின் வெடிப்பால் ஏற்படும் அழிவை யாராலும் தடுக்க இயலாது என்றும் ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த தாக்குதல் நடத்த இடத்தில் இருந்து வெறும் 500 கி.மீ., தொலைவில்தான், உலகின் மிக மோசமான அணுமின் நிலைய விபத்து நடந்த செர்னோபைல் நகரம் உள்ளது.   


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்