// print_r($new['title']); ?>
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடினார்.
இந்த நிகழ்வை காட்டும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றதுடன், குறித்த சந்திப்பு தொடர்பான விபரங்களை கனேடிய ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்ததாக சீன ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார்.
“உங்களை நம்புவது கடினம்” என்று சீன அதிபர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சந்திப்பில் சீன உளவாளிகள் மற்றும் கனேடிய தேர்தல்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
சில வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே சந்திப்பு நடந்தது.
“நாங்கள் விவாதித்த அனைத்து விஷயங்களும் பொருத்தமற்ற பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.” என்று இந்த கலந்துரையாடலின் போது சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதற்கு கனேடிய பிரதமர், தனது நாடு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்களை மதிக்கிறது, அது அவர்களின் கொள்கை என்று குறிப்பிட்டார்.