// print_r($new['title']); ?>
இந்தச் சந்தர்ப்பத்தையாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றாக வந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் அன்றும் சரி, இன்றும் சரி ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும்" - என்றார்.