// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இங்கிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சில் வீழ்ந்தது நியூசிலாந்து

இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வென்றது.

டி20 உலகக்கோப்பையில் இன்றைய ஆட்டம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹாலெஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்னும், ஹாலெஸ் 40 பந்துகளில் 52 ரன்னும் எடுத்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறினார்கள். கேப்டன் வில்லியம்சன் மற்றும் கெலன் பிலிப்ஸ் மட்டுமே நிலைத்து ஆடினார்கள். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்களையும், வில்லியம்சன் 40 ரன்களையும் எடுத்தார். இங்கிலாந்தின் சார்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். 73 ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வானார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்