// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கடலில் விழுந்து மூழ்கிய இந்திய ஏவுகணை

இந்திய தயாரிப்பு ஏவுகணை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசோதனையின் போது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் இருந்ததாக பரிசோதனை குழு தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் நடைபெற்ற இந்த பரிசோதனைகளில் ITCM ஏவுகணை,  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறியரக டர்போ பான் என்ஜின் மானிக் உடன் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அத்தோடு அதி மேம்படுத்தப்பட்ட லேசர் தடமறி கருவியும் இணைக்கப்பட்டு இருந்ததாக அறியப்பட்டுள்ளது.  

பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டு 30 செகண்ட்களில் கடலில் விழுந்து மூழ்கியுள்ளது ஏவுகணை. எவ்வாராயினும் எஞ்சினில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக பரிசோதனை நிறைவு பெறவில்லை என பாதுகாப்பு குழு வேதனையுடன் தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்