// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நடுக்கடலில் தமிழக மீனவர்களை ஏன் சுட்டோம்?; இந்திய கடற்படை விளக்கம்

நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதால் துப்பாக்கியால் சுட்டதாக இந்திய கடற்படை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று நள்ளிரவு தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் மேற்சிகிச்சைக்கும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய கடலோர காவல்படையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில், "சம்பந்தப்பட்ட படகு நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக நின்றது. அதனை சோதனைக்காக நிறுத்த கூறினோம். ஆனால், அவர்கள் நிறுத்தவில்லை. அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவே துப்பாக்கியால் சுட்டோம். அதில் தவறுதலாக மீனவர் வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனே அவரை ஹெலிகாப்டர் உதவியுடன் நடுக்கடலில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றோம். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றும் கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்