// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கொடநாடு வழக்கு: சசிகலா உட்பட 314 பேரிடம் பெறப்பட்ட 1,500 பக்க வாக்குமூலங்களை சமர்ப்பித்த தனிப்படை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் கூடுதல் புலன் விசாரணையை காவல்துறை தனிப்படை அமைத்து தொடங்கியது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைதுசெய்தனர்.

தொடர்ந்து கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த கூடுதல் விசாரணையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட 314 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பெற்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் தனிப்படையினர் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய எதிர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், ``கூடுதல் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பில் ஷாஜகான், கனகராஜ் ஆகிய இரண்டு சிறப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகின்றனர். தனிப்படையில் அங்கம் வகிக்கும் கூடுதல் எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கும் நிலையில், தனிப்படை இதுவரை சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான 1,500 பக்க ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் கூடுதல் எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தார். ஆவணங்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு விசாரணையை தொடங்கவிருக்கின்றனர்" என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்