// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சூரியனில் ஏற்பட்டுள்ள வெடிப்பினால் பூமிக்கு ஏற்படவுள்ள ஆபத்து

சூரியனிலிருந்து 2 இலட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள இழை ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

அந்த வெடிப்பனால் சிதறிய காந்த துகள்கள் பூமியைத் தாக்கக் கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நாசா சோலார் அப்சர்வேட்டரி சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் சில சூரிய வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சூரிய வெடிப்பினால் ஏற்படும் சிதறல்களால் ரேடியோ தகவல் தொடர்புகள், மின்சக்தி கட்டங்கள், மின்சார சிக்னல்கள் மட்டுமின்றி விண்வெளி வீரர்கள், விண்கலங்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய மேற்பரப்பில் 1,30,000 கிலோமீட்டர்கள் முழுவதும் 10க்கும் அதிகமான இருண்ட கருக்களைக் கொண்டுள்ளது. செவ்வாய்க் கிழமை காலை சூரியனில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இருந்து சூரியப்புயல் வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்