// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும்"

பெரும்பான்மையின ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு இன்று சென்று வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரித்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு இன்று காலை சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலய நிர்வாக பணிகளையும் பார்வையிட்டார்.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன், இந்திய தூதரக அரசியல் துறை ஆலோசகர் பானு பிரகாஸ் மற்றும் இந்திய தூதுவரின் பாரியார், நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இந்திய தூதுவர், எதிர்காலத்தில் இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தாழ்மையாக தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த ஆலயம் ஒரு புனிதமானது மாத்திரமில்ல, நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு ஆலயம் என்பதால், இந்த ஆலயத்தினுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆலயத்தில் இராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில், அந்த விடயம் தொடர்பாகவும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் என கோபால் பாக்லே கூறியுள்ளார்.

ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும், ஆலய நிர்வாகிகளும் தனக்கு நிறைந்த தெளிவுடன் அறிய தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்