// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கையெழுத்து வேட்டை தொடர்கிறது

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம்(23) பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நாளைய தினம் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்