// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"இலங்கையை தண்டிப்பதாக இருந்தால் காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்"

மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்றால், அது பெரியளவில் நடந்த காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதே பிலிப்பைன்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளது.

இது இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானியா, அந்த காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், இலங்கைக்கு எதிராக தற்போது தீர்மானத்தை கொண்டு வந்திருக்கும் பிரித்தானியாவை கண்டிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பின் போது இந்தியா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெனிவாவில் உள்ள தூதர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த தடவை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், முன்னைய தீர்மானங்களை காட்டிலும் பரந்த மற்றும் தொலைநோக்கு தாக்கங்கள் இருக்கக்கூடும் என்பதை இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்படி, மனித உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய, 'பொருளாதாரக் குற்றங்களுக்கு' பொறுப்பான அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் பயணத் தடைகளை எதிர்கொள்ளலாம்.

அத்துடன் வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்படலாம். அத்துடன் அதிகாரம் பெற்ற நாடுகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரைவுத் தீர்மானத்தில் உள்ள 42 பத்திகளில், 14 பத்திகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்றவை பெரும்பாலும் 2021 மார்ச் 23 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 தீர்மானத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் 2015 அக்டோபர் 1ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-1 தீர்மானத்தில் இருந்து ஒரு சரத்தும் புதிய வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்