// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"அடுத்தது நானே"

அடுத்த பொதுத் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று மாலை புத்தளத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதிக்கான ஜய சமகி மாவத விஷேட கூட்டம் இன்று புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சமத்துவம் மிக்க வெற்றிப் பயணித்தில் இணைந்திடுவோம் எனும் தொனிப் பொருளில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ரோஹன பண்டார ஆகியோருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

புத்தளம் மாவட்டத்தில் மாத்திரமின்றி முழு நாட்டிலுள்ள கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் எரிபொருள் பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.

ஆனால், எமது அரசாங்கத்தில் இந்த பிரச்சினை இருக்காது. புத்தளத்தில் வாழும் விவசாயிகள், வேளாண்மை விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதரங்களை உயர்த்துவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு அதிகப்படியான வாக்குகளை அள்ளித்தந்த புத்தளம் தொகுதி மக்களை நான் ஒருபோது மறக்க மாட்டேன். எனினும், கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் தொகுதியில் சிறுபான்மை வேட்பாளர்கள் ஒன்றினைந்து தராசு சின்னத்தில் போட்டியிட்டார்கள். ஆவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருதேன்.

எனினும், நீங்கள் தராசு சின்னத்திற்கு வாக்களித்தீர்கள். இவ்வாறு வாக்களித்து பாராளுமன்றம் சென்ற இந்த மாவட்டத்துடைய சிறுபான்மை மக்களின் பிரதி நிதி, கடைசியில் என்ன செய்தார் என்று புத்தளம் தொகுதி மக்கள் அறிவார்கள். இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் அத்தனை வேலைகளிலும் இந்த புத்தளம் சிறுபான்மை பிரதிநிதி செயற்பட்டுள்ளார்.

எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் அதற்கான தகுந்த பாடத்தை புத்தளம் தொகுதி மக்கள் வழங்க வேண்டும். 1970 களில் எமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். சீனி இல்லாமல் தேநீர் அருந்தினார்கள், மிளகாய் இல்லாமல் கறி சமைத்தார்கள். இதுபோன்றதொரு யுகத்தையே இன்று மொட்டுக் கட்சி உருவாக்கியிருக்கிறது.

உரம் இல்லாமல் வேளாண்மையை மேற்கொள்ளுமாறும், அரிசி இல்லாமல் சமைத்து சாப்பிடுமாறும் இவர்கள் கூறுகிறார்கள். உணவுப் பொருட்களின்p விலைகளும், கேஸ், எரிபொருள் விலைகளும் வானத்தை தொடுமளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மதவாத்தை தூண்டினார்கள், இனவாத்தை ஏற்படுத்தினார்கள், இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தினார்கள். அதுமாத்திரமின்றி, கொரேனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக எரித்தார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக செயற்பட்டதன் விளைவு மக்களின் சாபத்தை பெற்றுக்கொண்டார்கள்.

இறுதியில் ஜனாதிபதி பதவி விலகினார், பிரதமர் பதவி விலகினார், நிதி அமைச்சர் பதவி விலகினார் ஆனால் இந்த நாட்டை இவ்வளவு அழிவுக்கு கொண்டு சென்ற மொட்டுக்கட்சியினர் பதவி விலகவில்லை.

இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்களை பாதுகாப்பதற்காக ஒரு ஜனாதிபதியை நியமித்தார்கள். இதனால், மீண்டும் மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுடைய சாபங்களை பெற்றுக்கொண்ட நாட்டு மக்களிடையே இனவாதங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த திருட்டுக் கும்பலுடன் சமமாக அமர்ந்துகொண்டு ஆட்சி புரிவதற்கு எங்களது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை.

நாம்  புதியதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்டு சந்தித்த முதலாவது பொதுத் தேர்தலில் 23 சதவீத வாக்குகளையும் 54 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.

எனவே, இந்த நாட்டில் நாம் தனியாக ஆட்சி செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த வரிசை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறோம். வானத்தை தொடும் வரை விலை அதிகரிப்பு ஏற்பட்ட போது மொட்டுக் கட்சியினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைப் போல இல்லாமல், ஐக்கிய மக்கள் சக்தி அந்த நிலையிலிருந்து நாட்டை மக்களை பாதுகாக்கும்.

ஆத்துடன், அடுத்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி; நிச்சயமாக அதிகப்படியாக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு ஏனைய கட்சிகளின் ஆதரவுகளையும் பெற்று நாம் ஆட்சி அமைப்போம்.

எமது ஆட்சியில் இனவாத, மதவாத, பிரதேச வாதங்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம். எங்களை நம்பி வாக்களித்த நாட்டு மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

மாத்திரமன்றி, பலமான அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கி புத்தளம் மாவட்ட மக்களையும் நாம் நிச்சயமாக கௌரவிப்போம். புத்தளம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொடுப்போம் என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்