// print_r($new['title']); ?>
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசெபத்தின் இறுதி நிகழ்வில், இலங்கையர்களின் சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்கு இன்று (12) சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்குள்ள நினைவுகூரல் புத்தகத்தில் தனது பதிவை இட்டுள்ளார். அதன்பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மகாராணியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதியன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.