// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நாடு திரும்பினால் காணி தருவோம்; இலங்கை அகதிகளுக்கு வடமாகாண ஆளுநர் தகவல்

இந்தியாவில் இருந்து இருந்து இலங்கை திரும்பும் வடமாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபுப்புரை விடுத்துள்ளார்.

அதாவது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் நாட்டில் சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.

ஏற்கனவே ஒரு பகுதியினர் இலங்கைக்கு திரும்பியுள்ள நிலையில் படிப்படியாக தாய்நாட்டுக்கு வருகைதரும் வர்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

வருகை தரும் குடும்பங்களில் காணி அற்றவர்களுக்கு அரச நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவிலிருந்து வருகை தரும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு வழங்கும் வீட்டுத் திட்டத்தின் நிதியை அதிகரிக்குமாறு இந்திய அரசை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்