// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையின் நிலைமைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்-ஐ.நா

இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல்கள், பொருளாதார குற்றங்கள் மற்றும் உள்ளூர் ஊழல் ஆகிய தண்டனை விலக்கு உட்பட பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அடிப்படைக் காரணிகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையை மீட்பதற்கும், நெருக்கடியின் அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பதற்கும் ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மீதான நம்பிக்கை மற்றும் அமைதியான போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அறிக்கை குறிப்பிடுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்