// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பொருளாதார நாடுகளின் பட்டியல்; 5-வது இடத்தில் இந்தியா

 சர்வதேச அமைப்பான ஐஎம்எஃப் உலக நாடுகளின் பொருளாதார சூழல் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் முடங்கியது. இதன்காரணமாக உலக நாடுகளில் பொருளதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து நிலைமை சீரடைய தொடங்கியது.

இந்நிலையில் சர்வதேச அமைப்பான ஐஎம்எஃப்(IMF) உலக நாடுகளின் பொருளாதார சூழல் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி அதன் நிகர மதிப்பு ஆகியவற்றை டாலரின் அடிப்படையில் வைத்து கணக்கிடுகிறது.

ஐஎம்எஃப் அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக உலகின் பெரும் பொருளாதார பட்டியலில் உள்ள பிரிட்டன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் பதவி விலகினார் என்பது குறிப்பிட்டதக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்